“கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்னை இல்லை” - ராமதாஸ் பேட்டி!
பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சி நிறுவனம் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராமாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்த கூட்டம் திடீர் என ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அல்ல. ஒரு வாரம் திட்டமிட்டு இன்று பாமகவின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வன்னியர் சங்க கூட்டம், மகளிர் அணி கூட்டம் , மாணவர் அணி கூட்டம், மசுமைத்தாயம் அமைப்பு என அனைத்து அமைப்புகளில் கூட்டம் நடைபெறும்.
ஐம்பது தொகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சோதனைகளை தாங்கி, கட்சி நலனுக்காக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டும் என ஆலோசனை செய்யவுள்ளோம். அதனால்தான் பிரம்மாண்ட மாநாட்டை கூட்டினோம். பத்து லட்சம் பேர் கலந்துக்கொண்ட
னர்.
அதன் தொடர்ச்சியாக எப்படி வேலை செய்ய வேண்டும். ஐம்பது தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்த அறிவுரையை வழங்க உள்ளேன். நிர்வாகிகள் சொல்லும் யோசனையை நானும் கேட்கிறேன். யோசனையை பரிமாறிக்கொள்ள கூட்டத்தை கூட்டியுள்ளேன். 45 ஆண்டகளாக ஊடகம் ஆதரவு அளித்து வருகுறீர்கள். நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வரவழைத்துள்ளேன். செயல் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட பதிவை பார்த்திருப்பார் அவர் வரலாம் வராமல் போகலாம்.
50 சட்டமன்ற தொகுதிகளை படுத்துக் கொண்டே ஜெயிக்கும் பலம் கொண்ட பாமக, கூட்டணியில் சேரும்போது அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த கூட்டத்திற்கு வராத மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். மாநாட்டு பணிகளில் இருந்த கட்சி நிர்வாகிகள் கலைப்போடு இருப்பதால் கூட்டத்திற்கு வராமல் போயிருக்கலாம். கட்சியின் நிர்வாகிகள் யாரையும் கட்சி பதவியிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் கட்சி பதவியில் இருந்து வெளியேறலாம். கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்னை ஏதுமில்லை”
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.