For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை..!- உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

06:35 PM Nov 08, 2023 IST | Student Reporter
அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் இல்லை     உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்
Advertisement

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத்
ரெட்டியை அக்டோபர் 21-ம் தேதி கானத்தூர் காவல் நிலைய போலீசார் கைது
செய்தனர். அவர் மீது ஏற்கனவே இருந்த 2 வழக்குகளின்கீழும் போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர்.

இதனிடையே, JCB இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை என்றும், திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், சட்டவிரோதமாக தனது கணவர் கைது செய்யப்பட்டதாகவும் அமர் பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா கூறியிருந்தார். தொடர்ந்து தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் முன்னாள் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக தனது கணவர் புகார் கூறியதால், ஏடிஜிபி டேவிட்சன் தனது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி, தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள் : நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி,  அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்ற அச்சத்தில், அவரது மனைவி முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கமளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, நிரோஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags :
Advertisement