"விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8ம் தேதி நாடு திரும்புகிறேன். தமிழ்நாட்டிற்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகிறார்கள்; அதுதான் உண்மை. விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அதிகம் பேசமாட்டேன், சொல்வதைவிட செயலில் காட்டுவேன். எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் கருத்துக்கணிப்புகளை மிஞ்சி திமுக அமோக வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.