"திமுகவில் இருந்து வெளியேற எந்த ஒரு தேவையும் இல்லை" - திருமாவளவன் பேட்டி !
மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியவர்,
"கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற பல நல திட்டங்களை இந்த அரசு வழங்கியுள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவு கிடைக்கும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு சொல்லக்கூடாது என்று இல்லை, அதற்கான அதற்கான சூழல் கனிய வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனை தாண்டியும், நாட்டு நலன், மக்கள் நலன் என்பதையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். காலக்கணிப்பை கணிக்க முடியாது நடவடிக்கையை பொறுத்து மக்கள் நம்மளை அங்கீகரிப்பார்கள். தற்போது மாநில கட்சியாக அறிவிக்கிறார்கள் வலுவான கட்சியாக அங்கீகரிப்பார்கள்.
தர்மேந்திர பிரதாப் மன்னிப்பும் கேட்கவில்லை. மக்களவையில் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். நாகரிகம் மற்றவர்கள் என்று சொல்வது அநாகரிகமானது. தமிழ்நாடு அரசக்கும், பாஜக அரசுக்கும் இன்று நடக்கின்ற பிரச்சனை அல்ல, மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தனையோ அணுகுமுறையை கொண்டுள்ளது.
இந்தியை பேசக்கூடிய மாநிலங்களில் ஒரு மொழி கொள்கையை வைத்துள்ள இவர்கள் மூன்று மொழியில் கற்க வேண்டும் என கூறுகிறார்கள். அவர்களது தாய்மொழி நம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரே மொழி ஒரே கலாச்சாரம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல் ஒரே மொழி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுகவில் இருந்து வெளியேறுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை அதுக்கான தேவையும் இல்லை.
தொகுதி அடிப்படையில் மட்டுமே கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது. தென் மாவட்டங்களில் சாதி ரீதியான வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. சிலைமான் பகுதியில் இளைஞரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வன்கொடுமை தொடர்பாக நுண்ணறிவு பிரிவை ஏற்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.