”அறக்கட்டளை தொடங்கும் எண்ணம் இல்லை”- நடிகர் பாலா பேச்சு!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில், மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் அதிநவீன சலூன் கடை திறப்புவிழாவில் நடிகர் பாலா பங்கேற்றார். பின்னர் பொதுமக்கள் செல்பி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, விழாவில் பேசிய பாலா, விரைவில் சினிமாவில் மீண்டும் நடிக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லையே என்ற கேள்விக்கு பான் இந்தியாவில் நான் ஒரு படம் நடித்து அப்படம் வெளியாகட்டும், அதன்பின்னர் அது குறித்து கூறுகிறேன் என கூறினார்.
எதிர்காலத்தில் பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் இல்லை. ஆனால், பாலா மக்களின் கட்டளைகளை எப்போதும் ஏற்று நிறைவேற்றுவேன் என்றார்.
விஜய்க்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு நான் கடுகுமாதிரி அவர் இமயமலை மாதிரி என தெரிவித்தார்.