Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!

12:03 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

’’கடந்த 7 ஆண்டுகளாக 70 முறை நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஒருமுறை கூட வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை. தேசியத் தேர்வுகள் முகமை 240-க்கும் மேற்பட்ட தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. 5 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏராளமான தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, 4.5 கோடி மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்வை எழுதியுள்ளனர். நீட் தேர்வு அவசியம் என்று 2 முறை உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு அமைக்கப்பட்ட 4,700 மையங்களில், பாட்னாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளது. அங்கு காவல்துறையும் சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது.

2010ஆம் ஆண்டு யார் ஆட்சியில் இருந்தது? நீட் தேர்வைக் கொண்டுவர முடிவு செய்தது யார்? நீட் தேர்வு வேண்டும் என்று உச்ச நீதிமன்றே தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு மசோதாவை ஏன் காங்கிரஸ் கொண்டு வரவில்லை? தற்போது நடைபெற்ற சிறு சிறு தவறுகள் கூட இனி வருங்காலத்தில் நடைபெறாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Tags :
budget sessionDharmendra PradhanMinistry Of EducationNEETNeet Paper Leak
Advertisement
Next Article