Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை!

05:05 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பிக் பாஸ் சீசன் 7 பிரபல தொலைக்காட்சியில் அக். 1-ம் தேதி தொடங்கியது.  இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும்,  போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி,  கானா பாலா,  அர்ச்சனா,  தினேஷ்,  ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.  மீண்டும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள் விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

இதையும் படியுங்கள்:  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

இதுவரை அனன்யா,  பவா செல்லதுரை,  விஜய் வர்மா,  வினுஷா தேவி,  யுகேந்திரன், அன்னபாரதி,  பிரதீப் ஆண்டனி,  ஐஷு,  கானா பாலா,  ஆர்ஜே பிராவோ,  அக்ஷயா, ஜோவிகா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில்,  மிக்ஜாம் புயலின் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
Big Boss 7Big Boss TamilBIGG BOSSEliminationnews7 tamilNews7 Tamil UpdatesNo EliminationVijay Tv
Advertisement
Next Article