For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"துப்பாக்கி படத்துக்கும், மதராஸி கதைக்கும் சம்பந்தம் இல்லை" - நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி!

ஆயிரம் கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
12:44 PM Sep 04, 2025 IST | Web Editor
ஆயிரம் கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
 துப்பாக்கி படத்துக்கும்  மதராஸி கதைக்கும் சம்பந்தம் இல்லை    நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Advertisement

சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, "மதராஸி படம் முருகதாஸ் ஸ்டைல் படம் தான். அவர் பாணிக்கு நான் மாறியிருக்கிறேன். இதற்கு முன் இவ்வளவு ஆக்சன் கட்சியில் நடித்தது இல்லை, மதராஸி பக்கா மாஸ் கமர்ஷியல் ஆக்சன் கதை. என் காமெடி டோனை அதில் அதிகம் கலக்கவில்லை. அதை செய்தால் வேறு மாதிரி ஆகிவிடும். பர்ஸ்ட் ஆப்பில் காதலும், அடுத்த பாதியில் ஆக்சனும் இருக்கும்.

Advertisement

டாக்டர் படத்தை டார்க் கியூமர் பின்னணியில் கமர்ஷியலாக எடுத்தோம். அமரன் படத்துக்காக அவ்வளவு கஷ்டப்பட்டேன். நடிப்பை தவிர, டயட், உடற்பயிற்சி என்று பல விஷயங்கள் சவாலாக இருந்தது. மதராஸியில் பிட்டாக இருக்கணும், தாடி வெச்சு இருக்கணும். ஒரு கட்டத்தில் அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியாத கேரக்டர்னு சொன்னாரு. அதற்கேற்ப வெயிட் அதிகரித்தேன். வெயிட் கூடியதால் சண்டை, நடனத்திற்கு சிக்கல் ஏற்படும். அதை சமாளித்தேன்.

முருகதாஸ் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார். ரொம்பவே டென்சன் ஆக மாட்டார். மதராஸி படம் துப்பாக்கி குறித்து பேசுகிறது. இந்த படத்தில் தீவிரவாதம் இல்லை. நாங்க அமரனில் கூட அதிகம் காண்பிக்கலையே. நார்த்தில் இருந்து வரும் வில்லன், இங்குள்ள இளம் ஹீரோவை சந்திக்கும் கதை என்பதால் மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளோம்.

சமீபகாலமாக நான் ஆங்கிரி யங்மேன் ஆக நடித்து இருக்கிறேன். முடிந்தால் தொடுறா என்ற டயலாக் படத்தில் வரும் போது செம்மையாக இருக்கும். அதற்கு முன்பு வரும் சில நிமிட சீன்கள் அந்த டயலாக்கை வலுவாக்கி இருக்கும். இந்த கதையை ஷாருக்கானுக்காக யோசித்து இருக்கிறாார். எனக்காக மாற்றி, டெவலப் பண்ணி இருக்கிறார். நாங்க இரண்டு பேருமே டிவியில் இருந்து வந்தவர்கள்.

மதராஸியில் அரசியல் இல்லை. ஒரு எச்சரிக்கை கருத்து இருக்கிறது. நம்ம இடத்தில் இப்படி நடக்கும்னு படம் மூலமாக சொல்லியிருக்கிறோம். துப்பாக்கி படத்துக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், துப்பாக்கி கதையில் முக்கியமான விஷயமாக இருக்கும். கோட் படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடித்தபோது, துப்பாக்கி குறித்து விஜய்சாரிடம் பேசினேன். அவர் ஆச்சரியப்பட்டார். அண்ணன் விஜய் துப்பாக்கி கொடுத்து இருக்கிறார். தம்பி அதை காப்பாற்றணும் என்பது என் கருத்து.

மதராஸியில் நான் கருத்து சொல்லவில்லை. நம்ம வாட்ஸ்ஆப் மெசேஜில் அனைத்தும் வருகிறது. ஆகவே, கமர்ஷியலாக ஒரு கதை சொல்லியிருக்கிறோம். ஹீரோயின் ருக்மணிவசந்த் முதற்பாதியில் கலக்கியிருக்கிறார். அவர் கேரக்டரை எல்லாருக்கும் பிடிக்கும். திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகளை கடந்தவிட்டேன். என் மனைவி வந்தது பெரிய பிளஸ். என்னை ஓட வைக்கிறது அவங்கதான். வீட்டை அவங்க பாத்துகிறாங்க. நான் குழந்தைகளை கொஞ்சுகிறேன். என் 3 பசங்களும் எனக்கு ரசிகர்கள்தான். கூலி படத்திலும் நான் இல்லை. ஜெயிலர் 2விலும் நான் இல்லை. ஜனநாயகன் படத்திலும் இல்லை.

குடும்பம், ஆக்சன் என அனைத்து தரப்பு படங்களும் எப்போதும் ஓடும். நம்ம ஊரில் பல்வேறு தரப்பு ஓட்டல் இருக்கிறது. நான் நடிக்கிற படத்துக்கும் கொட்டுக்காளிக்கும் சம்பந்தம் இல்லை. அடுத்த இன்னொரு படத்தை தயாரிக்கிறேன். அதில் ஹீரோ, ஹீரோயின் இல்லை. கிராம பின்னணியில் காமெடி கலந்து உருவாகி உள்ளது.

ஆயிரம்கோடி வசூல் படம் என்பது ஜெயிலர் 2வில் நடக்கலாம். ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயமல்ல, அதற்கான நட்சத்திரம், புரமோசன், டீம் வொர்க் தேவைப்படுகிறது. என் படங்கள் ஆயிரம் கோடியை வருங்காலத்தில் எடுக்கலாம். அடுத்து பராசக்தியில் நடிக்கிறேன். அதற்காக உடல் எடையை குறைத்து இருக்கிறேன். 1960களில் கதை நடக்கிறது. அடுத்து சிபிசக்ரவர்த்தி, வெங்கட்பிரபு படங்களில் நடிக்கிறேன். நான் இது ஆகணும், அது ஆகணும்னு நினைப்பது இல்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் சார் உழைப்பு வேறு, தனித்துவம் வேறு. என் தனித்துவத்தை கண்டுபிடித்து, கடுமையாக உழைத்து, வெற்றிகள் கொடுத்தால் எனக்கான பாதை உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.

Tags :
Advertisement