Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

09:59 PM Dec 26, 2023 IST | Web Editor
Advertisement

பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவையும் அளித்துள்ளனர். மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமான அளவு இல்லாததால், மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேரில் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என பதில் தெரிவித்துள்ளார்.

Tags :
fundNews7Tamilnews7TamilUpdatesNirmala sitharamanRainRelief FundThoothukudiTN GovtTuticorin Rainsunion govt
Advertisement
Next Article