Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடையில்லை!" - மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

09:16 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தை வெளியிட தடையில்லை என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்தியன் 2 திரைப்படம் ஜிலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த சூழலில் மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் திரைப்படத்தில் இடம் பெற்றது.

ஆனால் முதலாம் பாகத்தின் பயன்படுத்திய வர்மகலை முத்திரையை 2 ஆம் பாகத்திலும் அனுமதி இன்றி கமல்ஹாசன் பயன்படுத்தி உள்ளார்.  ஆகவே ‘இந்தியன் 2’ திரைப்படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்கக்கோரி ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செல்வமகேஸ்வரி முன் நேற்று முன்தினம் (ஜுலை 9) விசாரணைக்கு வந்தபோது, "இந்தியன் திரைப்படத்தில் ‘வா்மக் கலை தகவல்’ என ராஜேந்திரன் பெயா் பதிவு செய்யப்பட்டது. இந்தியன் 2 திரைப்படத்தில் வா்மக் கலை தொடா்பான பதிவுகள், வா்மக் கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்துக்கும் வா்மக் கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடா்பும் இல்லை. இந்த வழக்கு தவறானது" என்று இயக்குநா் ஷங்கா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் சாய் குமரன் வாதிட்டார்.  இதனையடுத்து,  இந்தியன் 2 திரைப்படக் குழு தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர்.  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தை வெளியிட தடையில்லை என்று மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.  மேலும், ஆசான் ராஜேந்திரன் தொடுத்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags :
Aasan Rajendrancasedirector shankarIndianIndian 2Indian 2 ReleaseIndian2 From July12Kamal haasanMaduraiMadurai courtmovie
Advertisement
Next Article