Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீரன் சின்னமலை நினைவு தினம் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10:33 AM Aug 03, 2025 IST | Web Editor
மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

Advertisement

"ஓடாநிலையில் கோட்டைக்கட்டி ஆண்டு தன் வீரத்தாலும் - தியாகத்தாலும் கோடானு கோடி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று. அடிமைத்தனமே தோல்விக்கான தொடக்கப்புள்ளி என ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்து அந்நிய படையை விரட்டியடித்த தன்னிகரில்லா வீரத்துக்குச் சொந்தக்காரர்.

மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம். அவர் வழியில் தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை - அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Dheeran ChinnamalaiMemorial DayMinistertweetUdhayanidhi stalin
Advertisement
Next Article