For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை! சாத்தியமாகுமா?

03:40 PM May 23, 2024 IST | Web Editor
உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை  சாத்தியமாகுமா
Advertisement

நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான பிரைன் பிரிட்ஜ் நிறுவனம் தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முதல் செயலாக்க வீடியோவை வெளியிட்டுள்ளது. 

Advertisement

அமெரிக்காவின் நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான பிரைன் பிரிட்ஜ் தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.  ரோபோக்களின் உதவியுடன் தலை மாற்று அறுவை சிகிச்சையை அந் நிறுவனம் எப்படி செய்யப் போகிறது என்ற செயலாக்க வீடியோவும் வெளியாகியுள்ளது.

அந்த அனிமேஷன் வீடியோவில் ஒரு உடலில் இருந்த தலையை அகற்றி மற்றொரு உடலுக்கு வைக்கின்றனர்.  இது நரம்பியல் நோய்கள் மற்றும் நான்காம் கட்ட புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் எனவும் பிரைன் பிரிட்ஜ் நிறுவனம் கூறுகிறது.

பிரைன் பிரிட்ஜ் இந்த அறுவை சிகிச்சையில் ரோபோக்களை வழிநடத்த ஏ ஐ தொழில்நுட்பத்தை புகுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வு மட்டும் வெற்றியடைந்து விட்டால் அடுத்த 8 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வந்துவிடும் என்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளமான எக்ஸ்ல் பகிரப்பட்டதிலிருந்து இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.  மேலும் பல கருத்துகளை பெற்று வருகிறது.  ஆனால் மிகப்பெரும் சவாலாக இருக்கும் இந்த ஆய்வு பணக்காரர்களுக்கானதாக மட்டுமே இருக்கும் என்ற குரல்களும் சமூக வலைத்தளங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது.

Tags :
Advertisement