Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Paralympics | ஒரு புள்ளியில் தவறிய உலக சாதனை... அசத்திய ஷீத்தல் தேவி!

07:05 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். 

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனையான ஷீத்தல் தேவி ஒரு புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். பெண்களுக்கான தனிநபர் கூட்டுப் போட்டியில் சாதனையை தவறவிட்ட ஷீத்தல் தரவரிசைச் சுற்றில் பாராலிம்பிக் சாதனைகள் மட்டுமல்லாது, உலக சாதனையையும் முறியடித்து 720க்கு 703 புள்ளிகள் பெற்று அசத்தி உள்ளார்.

தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஸ்ட்ரெட்டன் (694 புள்ளிகள்), போப் பேட்டர்சன் (698 புள்ளிகள்) ஆகியோரின் முந்தைய சாதனைகளை ஓஸ்னூர் க்யூர் மற்றும் ஷீத்தல் தேவி முறியடித்துள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

Tags :
ArcherparalympicsSheetal DeviWorld record
Advertisement
Next Article