For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா? பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்!

03:26 PM Feb 22, 2024 IST | Web Editor
மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா  பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்
Advertisement

தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண் ஒருவர், மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த கேப்ரியல்லா ரோட்ரிகுயஸ் என்ற பெண், 2 ஆண்டுகளாக தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார்.  இதனிடையே இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டவர்களுக்கு சாண்ட்விச் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ளதை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.  தூய்மைப்பணியாளரான கேப்ரியல்லா, அங்கு மீதம் இருந்த ஒரு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்.  இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

இச்சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்கு பின்னர் கேப்ரியல்லாவை அழைத்த நிர்வாகத்தினர்,  அவரின் செயலை குற்றச்சாட்டாக முன்வைத்து பணிநீக்கம் செய்துள்ளனர்.  தொடர்ந்து, சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  அப்பெண் சாப்பிட்ட சாண்ட்விச்சின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.136 என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்ரியல்லாவின் பணிநீக்கம் தொடர்பான செய்தி சமூகவலைதளத்தில் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement