For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்” - #EPS க்கு பதிலளித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!

12:56 PM Oct 16, 2024 IST | Web Editor
“சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்”    eps க்கு பதிலளித்த  deputycm உதயநிதி ஸ்டாலின்
Advertisement

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் என மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியில் கருத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை நேற்று இன்று வரை தொடர்ந்தது. இதனிடையே, மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நேற்று (அக். 15) காலை சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யானைகவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை பகுதியான யானைக்கவுனி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் இருந்தனர். பின்னர் பேசின் பிரிஜ் பகுதியிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு பணிகளுக்கு இடையே, தூய்மைப்பணியாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தி உரையாடினார்.

இந்நிலையில், சென்னை திருவல்லிகேணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிகேணி அலுவலகத்தில் போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1000 உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது தயாநிதி மாறன் எம்.பி. உடனிருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து பருவ மழையை எதிர்கொண்டோம். தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி” என தெரிவித்தார்.

பின்னர் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சென்னையில் மழை நீர் தேங்காாமல் நிற்கிறது. இதுவே வெள்ளை அறிக்கை தான். வரும் நாட்களில் கனமழை பெய்தாலும் தமிழ்நாடு அரசு அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது”

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

Tags :
Advertisement