சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய காட்சி என பரவிய வீடியோ... உண்மை என்ன?
This News Fact Checked by ‘ FACTLY ’
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தங்கிய பிறகு, மார்ச் 19, 2025 அன்று பூமிக்குத் திரும்பினர் . இருவரும் ஆரம்பத்தில் ஜூன் 6, 2024 அன்று ஒரு குறுகிய கால சோதனைப் பணிக்காக ISS க்குச் சென்றனர் , ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் "ஸ்பேஸ் பக் " கண்டறியப்பட்டதால் அவர்கள் அங்கேயே தங்குபடியான எதிர்பாராத சூழல் ஏற்பட்டது . அவர்கள் திரும்பி வந்தபோது, சுனிதா வில்லியம்ஸ் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழைந்து நடனமாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை இங்கே , இங்கே , இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பயனர்கள், பூமிக்குத் திரும்பிய பிறகு சுனிதா எடுக்கும் முதல் வீடியோ என்ற கூற்றுடன் பகிரப்பட்டது. இது சரியான கூற்றா? என்பதை சரிபார்ப்போம்.
வைரலான வீடியோவின் Archived Link.
கூற்று : இந்த வைரல் காணொளியில், மார்ச் 19, 2025 அன்று பூமிக்குத் திரும்பிய பிறகு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதைக் காட்டுகிறது.
உண்மை என்ன? : இந்த காணொளி உண்மையில் ஜூன் 2024 ஆம் ஆண்டு, சுனிதா வில்லியம்ஸும் அவரது குழுவினர் புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (ISS) நுழைந்தபோது எடுக்கப்பட்டதாகும். இந்தக் காட்சிகள் அவர் சமீபத்தில் பூமிக்குத் திரும்பியதற்கு ஒத்ததாக இல்லை. எனவே,சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கூற்று தவறானது.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க FACTLY உண்மை சரிபார்ப்பு குழு, கூகுளில் ரிசவர்ஸ் புகைப்படத் தேடலை மேற்கொண்டது. தேடலில் இதே போன்ற பல சமூக லலைத்தளப் பயனர்கள் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த பதிவுகளை இங்கே , இங்கே மற்றும் இங்கே காணலாம். மேலும் அந்த தேடலின்போது, Boeing space -யின் அதிகாரப்பூர்வ X கணக்கில் இந்த வீடியோ கடந்த ஜூன் 07, 2024 அன்று பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. அந்த பதிவின் கேப்சனில், “சுற்றிலும் அரவணைப்புடன், ஜூன் 6 அன்று மதியம் 1.34 மணிக்கு #Starliner விண்கலம் டாக்கிங் செய்யப்பட்ட பிறகு Expedition 71 குழுவினர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் வரவேற்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Hugs all around! The Expedition 71 crew greets Butch Wilmore and @Astro_Suni aboard @Space_Station after #Starliner docked at 1:34 p.m. ET on June 6. pic.twitter.com/wQZAYy2LGH
— Boeing Space (@BoeingSpace) June 6, 2024
இது வீடியோ உண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவர்கள் வந்ததைக் காட்டுகிறது, பூமிக்குத் திரும்புவதை அல்ல. அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த தருணத்தையும், ஏற்கெனவே உள்ள குழுவினரால் வரவேற்கப்பட்ட தருணத்தையும் இந்தக் காட்சிகள் காட்டுகிறது.
அதே போல் FACTLY உண்மை சரிபார்ப்பு குழு, கடந்த ஜூன் 07, 2024 ஆம் தேதி NDTV profit-ன் யூட்டியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட அதே வீடியோவை கண்டறிந்தது. அந்த வீடியோவிற்கு “ISS-ஐ சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸின் வெற்றி நடனம்” என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் வீடியோ சமீபத்தியது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது ஜூன் 2024 இல் சுனிதா வில்லியம்ஸும் அவரது நண்பர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது.
இது தொடர்பான FACTLY-யின் ஆய்வில், இதே நிகழ்வை சொல்லும் பல செய்திகள் கண்டறிப்பட்டது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். இங்கே காணலாம். இதில் இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 06, 2024 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த பிறகு போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் இருந்து வெளியேறும்போது பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனம் ஆடினார். போயிங் ஸ்பேஸால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், வில்லியம்ஸ் ISS இல் உள்ள சக விண்வெளி வீரர்களை கட்டிப்பிடிப்பதற்கு முன்பு மகிழ்ச்சியுடன் நடனமாடுவதைக் காட்டுகிறது. அந்த செய்தியில் சுனிதா வில்லியம்ஸின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி பயணத்தை விளக்கும் வகையில் உள்ளது.
அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்:
மேலும் அந்த ஆய்வில், 286 நாட்கள் விண்வெளியில் கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பும் வீடியோவை நாசா நேரடியாக ஒளிபரப்பியது , அந்த நேரத்தில் அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்தது தெரிய வந்தது. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ காட்சியில், பூமியை அடைந்தவுடன் சுனிதா வில்லியம்ஸின் ரியாக்ஷன் தெளிவாகக் காணப்படுகிறது . இருப்பினும், நாசா ஸ்ட்ரீமில் இருந்து வரும் காட்சிகள் வைரல் வீடியோவுடன் பொருந்தவில்லை, இது வைரல் காட்சிகள் ஜூன் 06, 2024 அன்று அவர்கள் ISS இல் நுழைந்ததிலிருந்து எடுக்கப்பட்டவை, சமீபத்தில் பூமிக்குத் திரும்பியதிலிருந்து அல்ல என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.
நாசா வெளியிட்ட வீடியோ:
FACTLY உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வின் சுருக்கமான விளக்கம்: ஜூன் 2024 இல் சுனிதா வில்லியம்ஸின் நடன வீடியோ, அவர் பூமிக்குத் திரும்பிய பிறகு கொண்டாடுவதாக தவறாகப் பகிரப்பட்டது.
இந்த செய்தியை வீடியோ வடிவில் காண:
This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.