‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் ‘என்னை இழுக்குதடி’ வீடியோ பாடல் வெளியானது!
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரதர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நவீன காதலை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த ஜன. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படியுங்கள் : அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Time to groove! 🎶 The most-awaited #YennaiIzhukkuthadi video song from #KadhalikkaNeramillai is here!
🎙️@arrahman @dhee___
✍️@Lyricist_Vivek@iam_RaviMohan @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @tseriessouth @MashookRahman @shobimaster… pic.twitter.com/8OswwLDbLG— A.R.Rahman (@arrahman) February 7, 2025
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிப். 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ”என்னை இழுக்குதடி” வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.