For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக தலைவர் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட வீரவாள்!

06:56 PM Oct 27, 2024 IST | Web Editor
தவெக தலைவர் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட வீரவாள்
Advertisement

தவெக மாநாட்டு மேடையில் அதன் தலைவர் விஜய்க்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

Advertisement

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் தொடங்கியது. விக்கிரவாண்டி சாலையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாக முழுக்கம் எழுப்பினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்தனர். விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தனர். அதேசமயம் பெண்கள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது. சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் தொண்டர்கள் அளித்த கட்சித் துண்டை அதன் தலைவர் விஜய் அணிந்து கொண்டார். தொண்டர்களின் ஆரவாரத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விஜய் காணப்பட்டார்.

தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து 100 அடி உயர கட்சிக் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார். தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தவுடன் கட்சியின் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்தினை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. வெற்றி வாகை எனத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்கிற திருக்குறள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர கட்சியின் கொள்கைகளை விளக்கும் விதமாக கொள்கை பாடலில் விஜய்யும் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, விஜய்க்கு என்.ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினர். நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வீரவாளை தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உயர்த்தி காட்டினார். தொடர்ந்து தனது முதல் அரசியல் உரைக்கு முன்னதாக பெற்றோரிடம் விஜய் ஆசிர்வாதம் வாங்கினார்.

Tags :
Advertisement