For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா - புறக்கணித்த இந்தியா, சீனா!

உக்ரைனுக்கு ஆதரவாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
03:56 PM Feb 25, 2025 IST | Web Editor
உக்ரைனுக்கு ஆதரவான ஐநா தீர்மானத்தில் ரஷ்யாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா   புறக்கணித்த இந்தியா  சீனா
Advertisement

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 2022 பிப்., 24-ல் போர் தொடங்கியது. போர் தொடங்கி மூன்றாண்டுகள் ஆன நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டி வருகிறார்.

Advertisement

போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும் - ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். மேலும் போர் நிறுத்தத்துக்கு எதிராக சர்வாதிகாரி போல செயல்படும் ஜெலன்ஸ்கி பதவி விலகவேண்டும் என ட்ரம்ப் கூறிய நிலையில், நேட்டோ படையில் உக்ரைனை இணைத்தால் பதவி விலக தயார் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி இன்று வரை உக்ரைனுக்கு சுமார் 300 பில்லியன் டாலர்களை அள்ளி கொடுத்திருந்தது அமெரிக்கா. உக்ரைன் போருக்காக அமெரிக்க வழங்கிய நிதியை திருப்பி தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள கனிம வளங்களின் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஐ.நா.,வில், உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தைக் குறைக்கவும், போரை அமைதியான முறையில் தீர்க்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நாவின் இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா உள்ளிட்ட 18 நாடுகள் வாக்களித்தன. இதில் அமெரிக்காவும் ஒன்று என்பதுதான் தற்போது விவாதமாகியுள்ளது.  இந்தியா, சீனா உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களில் இருந்து இந்தியா விலகியிருப்பது ஆச்சரியமல்ல. இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பகைக்க வேண்டாம் என்ற முடிவில் இந்தியா விலகி இருக்கலாம்.

கடந்த முறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது 140-க்கு அதிகமான நாடுகள் வாக்களித்த நிலையில், தற்போது வெறும் 93 நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன.

Tags :
Advertisement