Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமோசா, ஜிலேபி-ல் வைத்த ட்விஸ்ட் - பொதுமக்கள் அதிர்ச்சி!

உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படியை அரசு கொண்டு வந்துள்ளது.
07:41 PM Jul 14, 2025 IST | Web Editor
உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படியை அரசு கொண்டு வந்துள்ளது.
Advertisement

 

Advertisement

இந்தியாவில் 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாகய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சத்துள்ள உணவுகள் இல்லாமல் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடிய கொழுப்பு நிறைந்த மோசமான உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமனை அதிகரித்து வருகிறது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சசகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் நாம் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றது. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி என கருதப்படுகிறது.

சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாகப்பூர் பகுதி தலைவர் அமை அமலே கூறினார்.

நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ள.

Tags :
FatFoodLabelsHealthMinistryHeartHealthPublicHealthSugarContent
Advertisement
Next Article