For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் கடந்து வந்த பாதை.....!

05:54 PM Jan 06, 2024 IST | Web Editor
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் கடந்து வந்த பாதை
Advertisement

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Advertisement

செப்டம்பர் 2, 2023 - ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக வெற்றிகரமாக ஏவப்பட்டது.

செப்டம்பர் 3, 2023 - ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் குறைந்தபட்சமாக 245 கிலோ மீட்டராகவும் அதிகபட்சமாக 22459 கிலோமீட்டராகவும் முதன் முறையாக நிர்ணயிக்கப்பட்டது.

செப்டம்பர் 5, 2023 -  இரண்டாவது முறையாக ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 282 கிமீ x 40225 கிமீ என்ற அளவில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது

செப்டம்பர் 10, 2023 - மூன்றாவது முறையாக ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 296 கிமீ x 71767 கிமீ தூரத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

செப்டம்பர் 15, 2023 - நான்காவது முறையாக ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 256 கிமீ x 121973 கிமீ தூரத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

செப்டம்பர் 18, 2023 - முதன் முறையாக ஆதித்யா-எல்1 அறிவியல் தரவு சேகரிப்பை தொடங்கியது.

செப்டம்பர் 19, 2023 - ஆதித்யா எல் 1 விண்கலம் தற்போது சூரியன் - பூமி இடையேயுள்ள எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.

செப்டம்பர் 25, 2023 - சூரியன் - பூமி இடையேயுள்ள  ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்கிற எல் 1 - ஐச் சுற்றியுள்ள விண்வெளி சூழ்நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது

செப்டம்பர் 30, 2023 - சூரியன் - பூமி இடையேயுள்ள  ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்கிற எல் 1 - ஐ நோக்கி செல்லும் வழியில் பூமியின் ஈர்ப்பு விசைக்குட்பட்ட தூரத்திலிருந்து  விண்கலம் வெளியேறியது.

நவம்பர் 7, 2023 - ஆதித்யா எல் 1 விண்கலம் முதல் உயர்-ஆற்றல் எக்ஸ்ரே காட்சியைப் படம்பிடித்தது.

டிசம்பர் 1, 2023 - சூரியனை நோக்கிய பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையில் ஈடுபட்டது.

ஜனவரி 6, 2024 - சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனப்படும் எல் 1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்தது.

Tags :
Advertisement