Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்...குவியும் பாராட்டு!

10:39 AM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்களை பார்த்து அவசர கால பிரேக்கை அழுத்தி,  அவற்றின் உயிரை ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். 

Advertisement

குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த சிங்கங்களைக் கண்டதும்,  அவசர கால பிரேக்கை அழுத்தி,  சரக்கு ரயிலை நிறுத்தியுள்ளார் ரயிலின் ஓட்டுநர்.  இதனால் 10 சிங்கங்கள் உயிர் தப்பியுள்ளன.  இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இது தொடர்பாக பாவ்நகர் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

“அமரேலி மாவட்டத்தின் பிபாவாவ் துறைமுகம் அருகே அமைந்துள்ள தண்டவாளத்தில் இச் சம்பவம் நிகழ்ந்தது.  தண்டவாளத்தில் சுமார் 10 சிங்கங்கள் அமர்ந்திருப்பதை பார்த்த சரக்கு ரயில் ஓட்டுநர் முகேஷ் குமார் மீனா,  உடனடியாக அவசர பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினார்.  இதனால்,  சிங்கங்கள் உயிர்தப்பின.  சிங்கங்கள் தண்டவாளத்தைக் கடக்கும் வரை ரயில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இயக்கப்பட்டது.  ஓட்டுநரின் இந்தச் செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

கிர் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கணிசமான தொலைவில் பிபாவாவ் துறைமுகம் அமைந்திருந்தாலும்,  கடந்த சில ஆண்டுகளில் பல சிங்கங்கள் இந்த வழித்தடத்தில் உயிரிழந்துள்ளன.  எனவே,  சிங்கம் மற்றும் பிற வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக பாவ்நகர் ரயில்வே துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இந்த வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருந்து,  நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பில் ரயிலை இயக்குகிறார்கள்” எனத் தெரிவித்தனர்.

Tags :
GujaratLionsLoco PilotPipavav Port Station
Advertisement
Next Article