'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
சத்யஜோதி ஃபிலிம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, தீபா மற்றும் மைனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 25 -ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற பல்வேறு ஹிட் படங்களை கொடுத்திருக்கும் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு சண்டை, விவாகரத்து, நட்பு, புரிதல் என பல்வேறு உணர்வுகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யோகி பாபு இப்படத்தில் நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் 'பொட்டல முட்டாய்' மற்றும் 'ஆகாச வீரன்' பாடல் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் அவர்கள் இருவரின் காம்போவை திரையில் பார்ப்பதற்கு மக்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.