பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" பட டிரெய்லர் இன்று வெளியானது!
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
01:38 PM Oct 09, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிராகன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு, சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
Advertisement
இந்த படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.