ராஷ்மிகாவின் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் உலகளவில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ராஷ்மிகா மந்தனா புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘தி கேர்ள் பிரண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
This one’s not your usual love story.. it’ll make you think. ❤️🔥#TheGirlfriend trailer out now..
In cinemas on November 7th ✨🔗https://t.co/D5wKxMIBe0 #TheGirlfriendOnNov7th@Dheekshiths @23_rahulr @HeshamAWmusic #AlluAravind #VidyaKoppineedi #PrashanthRVihari… pic.twitter.com/KAgxb1wnbp
— Rashmika Mandanna (@iamRashmika) October 25, 2025
சமீபத்தில், ராஷ்மிகாவின் முதல் தோற்றம் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.