For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் - கிராம மக்கள் செய்த செயல்!

தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த சோகம்;உடனடியாக மானை காப்பாற்றிய கிராம மக்கள்!
03:36 PM Jul 10, 2025 IST | Web Editor
தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த சோகம்;உடனடியாக மானை காப்பாற்றிய கிராம மக்கள்!
தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம்   கிராம மக்கள் செய்த செயல்
Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான்கள் அதிகமாக வாழ்கின்றன. கூட்டமாக வரும் மான்கள், அவ்வப்போது தண்ணீருக்காக வழி தவறி, கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன.

Advertisement

இந்த நிலையில் இன்று மதியம் கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை, தெரு நாய்கள் விரட்டி கடித்துள்ளன. இதை பார்த்த கிராம மக்கள் நாய்களை விரட்டி விட்டு, மானை பாதுகாத்துள்ளனர்.

பின்னர் டேனிஸ்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வந்து, அடிபட்டு கிடந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதனை தொடர்ந்து மான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement