அர்ஜூன் தாஸின் ‘பாம்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட்டின் ‘பாம்’ (BOMB) என்ற திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
An extremely special film. Something fun, something different, and made with all heart .Hope you all like it!
▶️ https://t.co/dfUjurQiSZ@ShivathmikaR @kaaliactor @gembriopictures @SudhaSukumar4@kaizensukumar @vishalvenkat_18 @immancomposer @editor_prasanna@actornasser… pic.twitter.com/bK3bcoxlhm
— Arjun Das (@iam_arjundas) June 27, 2025
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதன் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.