ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் டைட்டில் வெளியானது!
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் உருவாக உள்ளது. இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிஷா, ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து, ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.