#NEEK படத்தின் மூன்றாவது பாடல் ‘யேடி’ வெளியானது!
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் சிங்கிளான "golden sparrow மற்றும் காதல் ஃபைல் " என இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது பாடல் “யெடி” இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலும் ஒரு மெலடி பாடலாக அமைந்துள்ளது.