For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தின் ’கோரனாரு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

06:26 PM Jan 02, 2024 IST | Web Editor
 கேப்டன் மில்லர்   திரைப்படத்தின் ’கோரனாரு’ லிரிக்கல் வீடியோ வெளியானது
Advertisement

'கேப்டன் மில்லர்'  திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்,  சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  சூர்யாவின் 43-வது திரைப்படம் – பாடல் உருவாகும் பணிகள் தொடக்கம்!

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பின்னர் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடலும் வெளியாகியது.

ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ள நிலையில்,  படத்தின் முன் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் 3வது பாடலின் லிரிக்கல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உமாதேவி எழுத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் பாடியுள்ளனர். 

Tags :
Advertisement