"தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். அப்போது, தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்கிற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : “உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட” – திருமண விருந்தில் கூடுதல் பன்னீர் வழங்காததால் ஆத்திரம்… மினிபஸ் ஓட்டுநர் எடுத்த அதிரடி முடிவு!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கூறுவார். ஆனால் அவர் தற்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார். மு.கருணாநிதி இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள 'காலனி' என்ற சொல் தமிழ்நாடு அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.