For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘வணங்கான்’ திரைப்படத்தியின் டீசர் வெளியானது!

05:52 PM Feb 19, 2024 IST | Web Editor
‘வணங்கான்’ திரைப்படத்தியின் டீசர் வெளியானது
Advertisement

வணங்கான் திரைப்படத்தியின் டீசர் வெளியான நிலையில், இயக்குநர் பாலா மற்றும் அருண் விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார். இதனை அடுத்து கதையின் நாயகனாக அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், வணங்கான் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக காத்திருந்த இயக்குநர் பாலாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
Advertisement