For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமீர் நடித்த "மாயவலை" திரைப்பட டீசர் வெளியானது!

01:21 PM Dec 09, 2023 IST | Web Editor
அமீர் நடித்த  மாயவலை  திரைப்பட டீசர் வெளியானது
Advertisement

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடிக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Advertisement

பிரபல இயக்குநர் அமீர்,  பருத்திவீரன்,  ராம்,  மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.  அதே சமயம் கடந்த 2009-ல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயவலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.  இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.   முதலில் இந்த படத்தை அமீரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தயாரித்தனர்.  ஆனால் தற்போது வெற்றிமாறனும்,  அமீரும்  இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.  சில நாட்களுக்கு முன்பாக இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்: வெளியானது ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

இந்தப் படத்தின் டீசர் அமீரின் பிறந்த தினமான டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.  ஆனால்,  மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் மாயவலை டீசர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில்,  மாயவலை படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.  வடசென்னையை தொடர்ந்து மாயவலை படத்திலும் ராஜன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் அமீர்.

அவரது வாய்ஸ் ஓவரில் தொடங்கும் இந்த டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  இந்த திரைப்படம் அமீர்,  சஞ்சிதா ரெட்டி,  சத்யா மூவருக்கும் இடையேயான நட்பு,  காதல் பின்னணியில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.  மாயவலை படத்தின் டீசரை வெற்றிமாறன்,  கரு பழனியப்பன், சேரன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் வெளியிட்டனர்.

Tags :
Advertisement