கவினின் ‘கிஸ்’ பட டீசர் நாளை வெளியீடு !
தமிழ் சினிமாவில் வலர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் லிஃப்ட் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து டாடா , ஸ்டார் , பிளடி பெக்கர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “கிஸ்” . இதில் கவின் உடன் ப்ரீதி அஸ்ரானி , மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் விட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் கதாநாயகி சர்ச்சில் பிரார்த்தை செய்துகொண்டு இருக்கும்போது கவின் ஓரக்கண்ணால் அவரை பார்க்கும் காட்சி அமைந்துள்ளது.