For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' பாடலின் டீஸர் வெளியானது!

07:38 PM Mar 21, 2024 IST | Web Editor
லோகேஷ் கனகராஜ்  ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள  இனிமேல்  பாடலின் டீஸர் வெளியானது
Advertisement

இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் 'இனிமேல்' ஆல்பம் பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

Advertisement

ஸ்ருதிஹாசன் அவர் தந்தை கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு ‘இனிமேல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

மேலும், இந்த ஆல்பத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க, கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளதாகக் கூறப்பட்டது. துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதில், இந்த ஆல்பம் பாடலின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்தது. மணமக்கள் கோலத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் போஸ்டரை வெளியிட்டு, ‘வெற்றியாளர்கள் இல்லை; தோற்றவர்கள் இல்லை; இனிமேல் வீரர்கள் மட்டுமே’ எனப் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் டீசரை தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரொமான்ஸ் ஜானரை போல் உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் பாடலை வரும் மார்ச் 25ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement