Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜீவாவின் #Aghathiyaa படத்தின் டீசர் வெளியானது!

08:03 PM Jan 03, 2025 IST | Web Editor
Advertisement

ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'அகத்தியா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Advertisement

கடந்த 2003ம் ஆண்டு வெளியான 'ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரௌத்திரம், கலகலப்பு 2, கீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பிளாக்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'அகத்தியா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

https://x.com/VelsFilmIntl/status/1875159530746622342

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Tags :
AghathiyaaAghathiyaa TeaserJiivamovie updatenews7 tamilNews7 Tamil Updatestamil cinemaTeaser
Advertisement
Next Article