Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' படத்தின் டீசர் வெளியானது!

'தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
07:03 PM May 09, 2025 IST | Web Editor
'தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Advertisement

கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம்தான் கான்ஜுரிங். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஹாரர் திரைப்படம். இப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்கியிருந்தார். பேட்ரிக் வில்சன், விரபர்மிகா, லிலீ டெய்லர், ஜோய் கிங் உள்ளிட்ட பலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. அந்த வகையில், இதன் 2ம் பாகம் 2016ம் ஆண்டிலும், 3ம் பாகம் 2021ம் ஆண்டிலும் வெளியானது.

Advertisement

இதையும் படியுங்கள் : த்ரில்லர் ஜானரில் களமிறங்கும் ஜி.வி. பிரகாஷ்… வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இப்படத்திற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஹாரர் பட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இப்படத்தின் 4ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மைக்கேல் சாவ்ஸ் இயக்கியுள்ளார். இதில் பேட்ரிக் வில்சன், வேரா ஃபார்மிகா, மியா டாம்வில்சன், தைசா ஃபார்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் வழக்கம்போல் திகல் காட்சிகளுடன் அசத்தலாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :
ConjuringHollywoodHorror Filmnews7 tamilNews7 Tamil UpdatesTeaserThe ConjuringThe Conjuring Last Rites
Advertisement
Next Article