Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ப்ரோமோஷன் பணிகளில் தங்கலான் படக்குழு!

04:45 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

தங்கலான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதையொட்டி படத்தின் முக்கிய பிரபலங்களான விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பா. ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்..

Tags :
GnavelRajaGV PrakashPa. Ranjiththangalaanvikram
Advertisement
Next Article