கிறிஸ்துமஸ் அன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ‘சூர்யா 44’ படக்குழு! டீசர் மற்றும் டைட்டில் வெளியீடு!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்திற்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஜ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு ரெட்ரோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.