தாமதமாக வந்ததால் மோதல்! தலைமுடியைப் பிடித்து சண்டை போட்ட ஆசிரியைகள்!
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வருகிறது. தினம்தோறும் வருகைப் பதிவேட்டில் குறிக்கும் போது பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்களை அப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பது வழக்கமாக இருந்துள்ளது.
இதையும் படியுங்கள் : கடனை திருப்பி தராததால் சொந்த மச்சானை கடத்திய மாமன் உள்பட 5 பேர் கைது!
வழக்கம்போல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த பெண் ஆசிரியையிடம் கால தாமதமாக வந்ததாகக் கூறி அப்பள்ளி தலைமை ஆசிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த பெண் ஆசிரியை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்த பெண் ஆசிரியையிடம் அப்பள்ளி தலைமை ஆசிரியர் கேள்வி எழுப்பி உள்ளார். இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்ந பள்ளி தலைமை ஆசிரியர் அந்த பெண் ஆசிரியை கடுமையாக தாக்க தொடங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு அந்த பெண் ஆசிரியை சரியான பதில் அளிக்காததால், கோபமடைந்த தலைமை ஆசிரியர் அவரை சரமாரியாக அடித்தும், அவரது தலைமுடியை பிடித்து இழுத்தும் தாக்கியுள்ளார் . இந்த நிகழ்வை பள்ளியில் பணிபுரியும் சாக ஆசிரியர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ பதிவு வெளியானதைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.