For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!

08:20 AM Mar 21, 2024 IST | Web Editor
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி
Advertisement

பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக
செலுத்திய தங்கத்தை பிரித்து கட்டிகளாக மாற்றி கணகெடுக்கும் பணி
நடைபெற்றது.

Advertisement

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி வெளிநாட்டு நாணயம் ஆகியவை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இதையும் படியுங்கள்  : பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உண்டியல்கள் நிரம்பியவுடன் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என பக்தர்கள் வருகையை பொறுத்து உண்டியலில் எண்ணிக்கை நடைபெறும். உண்டியலில் கிடைக்கும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கோயில் லாக்கரில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இதையடுத்து, கடந்த 16 ஆண்டுகளாக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் சுமார் 202 கிலோவுக்கு மேல் உள்ளது. தங்கத்தை சுத்த தங்கமாக பிரித்தெடுக்கும் பணி பழனி
கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி மாலா
தலைமையில் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் உறுப்பினர் முன்னிலையில் தங்கத்தில் இருக்கும் கற்கள், அரக்கு , அழுக்கு நீக்கப்பட்டு,
சுத்த தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியானது 15 நாட்களுக்கு மேல் நடைபெறும் எனவும், தங்கத்தை மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்கு ஆலைக்கு அனுப்பி தங்ககட்டிகளாக மாற்றப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement