For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ‘பிரேமலு’  திரைப்படத்தின் தமிழ் டிரைலர்!

03:10 PM Mar 13, 2024 IST | Web Editor
வெளியானது ‘பிரேமலு’  திரைப்படத்தின் தமிழ் டிரைலர்
Advertisement

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன்,  மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள  ‘பிரேமலு’  திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement

மலையாள மொழியில் பிரபல இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன்,  மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரேமலு’.  இத்திரைப்படத்திற்கு விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.  நடிகர் ஃபகத் ஃபாசில்,  இயக்குநர் திலிஷ் போத்தன்,  திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  சமீபத்தில் தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.   இதற்கான,  டப்பிங் பணிகள் முடிந்ததாகவும் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் திரைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில், பிரேமலு திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement