டி20 உலகக் கோப்பை : இந்தியா, கனடா போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாள், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில், இன்று இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான 33வது போட்டி ஃப்ளோரிடாவில் நடைபெற இருக்கிறது.
இதையும் படியுங்கள் : “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
இந்த போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது. மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்தது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா - கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.