Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது த.வெ.க. மாநாடு!

பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
03:29 PM Aug 21, 2025 IST | Web Editor
பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
Advertisement

 

Advertisement

இன்னும் சற்று நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்க உள்ளது. TVK எனும் தொண்டர்களின் ஆரவாரத்துடனும், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடனும், பண்பாட்டு நிகழ்வுகளுடனும் மேடை இனிதே களைகட்டியுள்ளது.

மாநாட்டின் தொடக்கமாக, விஜயின் பெற்றோர் - தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் - மேடைக்கு வருகை தந்தனர். இவர்களின் வருகை மதுரை மண்டலத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மாநாட்டு அரங்கையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளுக்கு மத்தியில் அவர்கள் மேடையேற, மாநாடு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.

தற்போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேடைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகைக்காக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த மாநாடு, கட்சியின் எதிர்கால திசை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
tamilnadupoliticsThalapathyVijayTVKMaanaaduvijay
Advertisement
Next Article