Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், தமிழக உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
05:51 PM Jan 31, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை, மிரட்டல் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சுந்தர் என்பவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,

Advertisement

கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, விசாரணை முடிந்து, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்ததும், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தொடர்கிறது. தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலையில், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் காவல்துறையினர் அதை பின்பற்றுவதில்லை என்று தெரிவித்ததோடு, காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவை நிராகரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags :
home Secretarymadras highcourtSupreme courtTN Govt
Advertisement
Next Article