முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி!
12:01 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தன் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தன் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிய மனுவை, நீதிபதி ரிஷிகேஷ்ராய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ராஜேஸ்தாஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பெண் IPS அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறி தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு DGP ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இறுதி வாதங்கள் வைக்க அவருக்கு மற்றொரு வாய்ப்பு தந்து மீண்டும் வழக்கை இன்று விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கிறது.
அதன்படி, இந்த வழக்கு விசாரனையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆஜரானார்.