For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி | உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

01:08 PM Oct 14, 2024 IST | Web Editor
கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி   உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

இதுபோன்ற சூழலில் உச்சநீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கோவிட் தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் ? மனுவின் சாராம்சம் என்பது பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே இருப்பது போன்று உள்ளது. கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், எதுபோன்ற பக்கவிளைவுகள் நமக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement