ஆட்டத்தை தொடங்கிய வெயில்... 11 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரேவே தயங்குகின்றனர். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதன் தொடர்ச்சியாக இன்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.
அதன் விவரம் பின்வருமாறு,
மதுரை- 104 டிகிரி(40 செல்சியஸ்)
சேலம் - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
வேலூர் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)
ஈரோடு - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம்- 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
கரூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)
திருத்தணி - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
கோவை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)