"சூரியன் ரொம்ப தொல்லை கொடுக்கிறது" - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
சென்னை, விருகம்பாக்கத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
"சனாதனத்தை பற்றி பேசிய உதயநிதி, சனாதனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விருந்தோம்பலுக்கு சென்று விட்டார். உதயநிதி கோயிலுக்கு அருகில் வருவது மகிழ்ச்சி, கோவிலுக்கு உள்ளேயும் சென்று தரிசிக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாங்கள் நினைப்பதை தான் படிக்க வேண்டும் என்று புத்தக வெளியீட்டில் ஆணவத்துடன் பேசுகிறார்கள்".
நீட் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான், அதை முதலமைச்சர் ஒப்புக் கொள்கிறாரா? பாஜகவுடன் கூட்டணி இல்லை என சி.டி.நிர்மல் குமார் கேள்விக்கு,
"தவெக சார்பாக எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வரவில்லை. கட்சியின் தலைவர் விஜயிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பாக பேச எங்க கட்சியின் தலைவர்கள் இருப்பார்கள். எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது என்பது எனது கருத்து.
கூட்டணி யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்பது குறித்து அகில இந்திய பாரத தலைமை முடிவு செய்வார்கள். திராவிட முன்னேற்ற கழகம் அப்புறப்படுத்த வேண்டிய ஆட்சி, யாரெல்லாம் கொள்கை உள்ளவர்களோ அவர்களெல்லாம் உடன் இருந்தால் நல்லது என்பது எனது கருத்து. சூரியன் ரொம்ப தொல்லை கொடுக்கிறது. முதலமைச்சரால் சூரியனைத் தாங்க முடியாமல் ஊட்டிக்குச் செல்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.