Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
01:30 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.

Advertisement

மேலும் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், "இந்தியாவின் விண்வெளித் திட்டம், ஸ்பேடெக்ஸ் என்ற ஸ்பேஸ் டோக்கிங் பரிசோதனையின் கீழ் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக டோக்கிங் மூலம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது! விண்வெளி டோக்கிங் திறனை வெளிப்படுத்திய 4வது நாடு இந்தியா.

இந்த சாதனை சந்திரயான்-4, இந்தியாவின் திட்டமிடப்பட்ட விண்வெளி நிலையம் மற்றும் ககன்யான் போன்ற விண்வெளி ஆய்வுகளின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்த சாதனை வழி வகுக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திறனை உயர்த்தியதற்காக இஸ்ரோ, நாட்டின் ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், "செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி ஆய்வு குழுவிற்கும் வாழ்த்துகள். இது இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
draupadi murmuNarendra modiPresidentprime ministerSpaceX projectsuccess
Advertisement
Next Article